பிரிக்ஸ் மாநாடு: மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அமைதி நிலவ உலகத் தலைவர்கள் அழைப்பு!

Date:

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அமைதி நிலவ உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். மாநாட்டில் இந்திய பிரதமா் மோடி,சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் பெசெஷ்கியானி உள்பட உறுப்பு நாடுகளின்  தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், 16-வது பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது;- “பிரிக்ஸ் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தைகள்  மற்றும் உரையாடல்களை ஆதரிக்கிறது, போரை அல்ல. கொரோனா தொற்று போன்ற ஒரு சவாலை நம்மால் ஒன்றாக சமாளிக்க முடிந்ததைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வலுவான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை நம்மால் நிச்சயமாக உருவாக்க முடியும் என்றார்.

இதேவேளை உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இரு தலைவர்களும் 50 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோதி எக்ஸ் பக்கத்தில், “கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தேன். இந்தியா- சீனா உறவுகள் நமது நாட்டு மக்களுக்கும், இந்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்”, என்று பதிவிட்டார்.

யுக்ரேன் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, மேற்கு அல்லாத நாடுகளின் வலிமையைக் காட்டுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...