முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளார்கள் என ஊட கவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘எனக்குத் தெரியாது.போய்ப் பார்க்க வேண்டும்’ என நாமல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (23) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.