பலஸ்தீனத்துக்கு 30 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

Date:

போரால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 30 தொன்  நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பலஸ்தீனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பலமுறை கண்டனம் தெரிவித்தும் காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தே வருகிறது. இதனால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையி்ல் மனிதாபிமான அடிப்படையில் 30 தொன்  நிவாரணப் பொருட்களை பலஸ்தீனத்துக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இதில்,மருந்துகள், அறுவை சிகிச்சைபொருட்கள், பல் மருத்துவத்துக்கான மருந்துகள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் அதிக சத்து கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை (UNRWA) மூலம் இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...