தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏன் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியபோது,
“பெரியார் எங்கள் கொள்கை தலைவர். கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை.
எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அண்ணா சொன்ன மாதிரி – ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களது நிலைப்பாடும்.
ஆனாலும், பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை பெரியாரின் இவை அனைத்தையும் முன்னெடுக்கபோகிறோம்.
பெரியாரை அடுத்து எங்கள் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர், அவர் இந்த மண்ணில் மதசார்ப்பிண்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்கும் அவரை எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம்.
இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையும் நிலைநிறுத்தபோராடும் மாபெரும் தலைவரான அவரையும் எங்கள் கொள்கை தலைவராக சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
பெண்களை கொள்கை தலைவராக ஏற்று களத்திற்கு வரும் முதல் கட்சியாக நமது தவெக தான். அப்படி நம் வழிக்காட்டிகளாக ஏற்ற இரு பெண்களில் ஒருவர் வேலுநாச்சியார். சொந்த வாழ்க்கையின் சோகங்களை எல்லாம் மறுந்து இந்த மண்ணுக்காக வால் ஏந்தியும் வேல் ஏந்தியும் போர்க்களம் புகுந்த ஆணை காட்டிலும், வீரமான வீரப்புரட்சியாளர் நமது வேலுநாச்சியார்.
நடிகர் விஜய் சினிமாத்துறையில் இருந்து விலகி, அரசியல் கட்சியைத் துவங்கியுள்ளார். இந்தக் கட்சியின் கொடி மற்றும் பெயரை முதலில் அறிவித்த விஜய், பிறகு கட்சி கொடி குறித்து விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்டவற்றை மாநாட்டில் அறிவிப்பேன் என விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாணி, வி.சாலை பகுதியில் நடைபெற்றுவரும் தவெக மாநாட்டிற்கு அக்கட்சியின் தலைவர் வருகை தந்தார். இவருடன் தவெகவின் தலைவர் விஜய்யுடன், தலைமை நிலையச் செயலாளர் ராஜகேசர், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கைப் பரப்பு துணைச் செயலர் ஜஹீரா உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
முதலில் மேடைக்குவந்த விஜய், பிறகு திடீரென மக்கள் கூட்டத்திற்கு நடுவில் இருந்த ராம்பில் நடந்துசென்றார். அப்போது இரு புறங்களில் இருந்து அவரது கட்சியின் தொண்டர்கள் தவெகவின் கொடி நிறத்தில் இருக்கும் துண்டுகளை வீசினர். அதனை எல்லாம் அப்படியே கையில் பிடித்து தன் தோளில் மீது போட்டுக்கொண்ட விஜய் தொண்டர்களுக்கு கை அசைத்தப்படி, முழுமையாக நடந்து சென்று பின் மேடைக்கு திரும்பினார்.