சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

Date:

(சதொச) கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பானது இன்று (1) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கினங்க குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளமையினால் அன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 25,000 ரொக்கப் பிணையிலும் 1 மில்லியன் சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...