‘CNCI சாதனையாளர் விருதுகள் 2024: ஹலால் கவுன்சிலுக்கு வெள்ளி விருது!

Date:

இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National Chamber of Industries – CNCI) இன் 2024ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தேசிய அளவிலான தொழில்துறை சிறப்புக்கான வெள்ளி விருதை ஹலால் கவுன்சில் தனதாக்கிக் கொண்டுள்ளது.

CNCI சாதனையாளர் விருதுகள், முன்னைய ஆண்டில் பல்வேறு துறைகளில் கைத்தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு விரிவாக பங்களிப்பு செய்த தொழிலதிபர்களை அடையாளம் கண்டு விருது வழங்குகின்றது.

HAC ஆனது 250 க்கும் மேற்பட்ட இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2023 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது உள்நாட்டு ஏற்றுமதித் தொழிலை சாதகமாக பாதிக்கும்.

இந்த ஆண்டின் முற்பகுதியில், தேசிய தர விருது விழாவில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து (SLSI) ஹலால் கவுன்சிலுக்கு (Merit) மெரிட் விருதும் வழங்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை உற்பத்தியாளர்களை வலுவூட்டுவதற்கான HAC இன் அர்ப்பணிப்பை இந்த மதிப்பீடு மேலும் வலுப்படுத்தும்.

சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள், ஹலால் தரங்கள் பேணப்பட்டுள்ளதை உறுதி செய்வதோடு, நுகர்வோரின் நலன்களை அது பாதுகாக்கின்றது.

தாம் உண்ணும் உணவுப் பொருட்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றில் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும் என்பதில் தற்போது நுகர்வோர் அதிகளவில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஹலால் சான்றளிக்கப்பட்ட ஒரு தயாரிப்பானது, இறந்த விலங்குகள், மனித உடல் பாகங்கள், பூச்சிகள், அபாயகரமான பொருட்கள், விஷம் மற்றும் நச்சுப் பொருட்கள், இரத்தம், பன்றி மற்றும் மதுபானம் ஆகிய விடயங்கள் கொண்ட மூலப்பொருட்களையோ, பதப்படுத்திகளையோ, சுவையூட்டிகளையோ கொண்டிராதவையாக இருக்க வேண்டும்.

ISO 17065 & GSO 2055 தர நிலைகளை பின்பற்றும் HAC ஆனது, Gulf Cooperation Council (GCC) அங்கீகார மையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதோடு, ISO 9001 சான்றிதழைப் பெற்று, சர்வதேச தர முகாமைத்துவ தரங்களை உரிய முறையில் பேணிச் செயற்படுகின்றது.

இவ்விடயங்கள், திறனான சேவை வழங்கலை HAC மேற்கொள்ள உதவுதோடு, ஹலால் தரநிலைக்கு இணங்கி செயற்படும் நிறுவனங்கள், தமது ஹலால் சான்றிதழை விரைவாகப் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...