அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிக்கு தேவையான 277 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்ற நிலையில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது.
சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.