இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது சரமாரியாக தாக்குதல்: நெதர்லாந்துக்கு மீட்புக் குழுவை அனுப்ப நெதன்யாகு உத்தரவு

Date:

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவு வேளையில் கடுமையாக தாக்கப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானங்கள் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு விரைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இது திடீரென நடத்தப்பட்ட ‘ஹிட் அண்ட் ரன்’ தாக்குதல்கள் என்று இஸ்ரேல் அதிகாரிகள் விமர்சித்தனர்.

இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் லெபானான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் சுற்றியுள்ள அண்டை நாடுகள் எல்லாமே கிட்டத்தட்ட பகைமை உணர்வில் தான் இஸ்ரேல் மீது இருக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு கால்பந்துபோட்டியை காண்பதற்கு சென்றுள்ளனர்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த கால்பந்து போட்டி நடந்த பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் சிலர் அரபு தேசத்தின் ஆதரவாளர்களை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அரபுதேச ஆதரவாளர்கள், அவர்களை கடுமையாக தாக்கிதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வெளியான தகவல்களை பார்ப்போம்.

கடந்த வியாழன் அன்று மாலை இஸ்ரேலிய கால்பந்து கிளப்பான மக்காபி டெல் அவிவின் யூரோபா லீக் கால்பந்து போட்டியினை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விளையாடியது.

இந்த போட்டி நடந்த பின்னர் சில இஸ்ரேலிய ஆதரவாளர்கள் அரபு நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அரபு தேச ஆதரவாளர்கள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர் . இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வெளியேறினர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டதாக அரபுதேச ஆதரவாளர்கள் 60 பேரை நெதர்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷமிடுவதும், அதற்கு பதிலடியாக அரபு தேச ஆதரவாளர்கள் தாக்குவதுமாக உள்ளது. அத்துடன் அந்த வீடியோவில் மோதலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த களம் இறங்கியதும் தெரிந்தது.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் இதுபற்றி கூறும் போது, “இஸ்ரேலிய குடிமக்கள் மீதான யூத-விரோத தாக்குதல்களை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இது போன்ற நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று காட்டமாக கூறினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசி மூலம் பேசிய நெதர்லாந்து பிரதமர் “குற்றவாளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில், “கால்பந்து விளையாட்டைக் காணச் சென்ற ரசிகர்கள், யூத வெறுப்பு காரணமாக வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் என்ற காரணத்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...