T20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி நியூஸிலாந்து அதிரடி வெற்றி

Date:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியானது 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் ஆரம்பமாகியுள்ள டி20 தொடரின் தொடக்கப் போட்டியில் இலங்கை அணியானது நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை நியூஸிலாந்துக்கு வழங்கியது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்கள‍மைாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், மத்தீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும், நுவான் துஷார 2 விக்கெட்டுகளையும் மற்றும் மகேஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

பின்னர் 109 என்ற இலகுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பத்தும் நிஸ்ஸங்க மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றார்.

நியூஸிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபடியாக கிளென் பிளிப்ஸ், லொகி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூஸிலாந்து 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக லொக்கி பெர்குசன் தெரிவானார், தொடரின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானர்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நவம்பர் 13 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...