சட்டவிரோதமாக வாக்காளர்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட 3 பஸ்கள்; சாரதிகள், நடத்துனர்கள் கைது

Date:

தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நடத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மணல்தோட்டம், ஏஜி முகாம், ஏத்தாளை, கல்பிட்டி, மாம்புரி ஆகிய இடங்களில் வசிக்கும் 25 தொடரக்கம் 45 வயதுடையவர்கள்.

சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...