ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,863,186 வாக்குகளுடன் 141 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.