42 அமைச்சுகளுக்கு 21 அமைச்சர்கள்: முதற்தடவையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை

Date:

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தது.

42 அமைச்சுக்களுக்கான 21 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக தலைமையிலான அரசாங்கம் 25 பேர் கொண்ட அமைச்சரவையால் ஆளப்படும் என அறிவித்ததற்கிணங்க மேலும் 4 பேர் அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

நியமிக்கப்பட்ட 21 பேர் அடங்கிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.

எஞ்சியிருக்கும் நால்வரிலும் கூட முஸ்லிம்கள் எவரும் இல்லை என newsnow  தேடலில் தெரிய வந்துள்ளது.

முஸ்லிமகளுக்கு எதிராக இனவாதத்தைப் பரப்பி அதன் மூலம் கிடைத்த வாக்குகளினால்  ஆட்சிக்கு வந்த கோதாபய ராஜ்பக்சவின் அமைச்சரவையில் கூட அமைச்சுப் பதவி சட்டத்தரணி அலி சப்ரிக்கு வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி கோதபாய பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி அனுரா குமாரவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையே இலங்கையின் முதலாவது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட அமைச்சரவையாக கருதப்படுகிறது.

இம்முறையை அமைச்சரவையில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்குத் தெரிவான ராமலிங்கம் சந்திரசேகர் மீன்பிடி, நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. கலாநிதி ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. விஜித ஹேரத் – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. சரோஜா சாவித்திரி போல்ராஜ்- பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. கே.டி.லால்காந்த – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி மற்றும் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக நியமிப்பு.
  9. உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. சுனில் ஹதுன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. ஆனந்த விஜேபால – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  12. பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. சமந்தா வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  16. சுனில் குமார் கமகே – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  17. வசந்த சமரசிங்க – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  20. பொறியியலாளர் குமார் ஜெயக்கொடி – எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  21. வைத்தியர் தம்மிக்க படபெதி – சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...