நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க தீர்மானம்?

Date:

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தாவது பாராளுமன்றத்தின் ஆளுங் கட்சியின் பாராளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதி சபாநாயகராக நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் 21ம் தேதி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு எம்.பி.க்களையும் அரசாங்கம் அறிவித்த பின்னர், அந்த இரண்டு பெயர்களும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...