இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்கள் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சர்வதேசம் உள்ளிட்ட அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து வரப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைக்கிறார்