முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஏறாவூர் நகரசபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.நளீம் பெயரிடப்பட்டுள்ளார்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைப்பெற்றன.
அதன்படி, கிடைக்கப்பெற்ற ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில்  விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில், கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டதுடன், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முன்மொழிவுகளின் பிரகாரம், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கானஉறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...