தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த சுகாதார அமைச்சர்

Date:

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று (22) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில  இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS), அரசாங்க பல்மருத்துவ சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் ஆகியவை பங்குபற்றியிருந்தன.

இதன்போது சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சரியான சுகாதார சேவையைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது தொழில் பிரச்சினைகளை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சுடன் இணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது எனவும் இதன் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு முறையாக செயற்பட முடியும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு இடமளிக்காமல், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வழங்குமாறும் அமைச்சர் விசேட கோரிக்கை விடுத்தார்.

இந்த கூட்டத்தில், பிரதி சுகாதார அமைச்சர்  ஹன்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...