பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதற்காக மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா இராமநாதன்!

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டமைக்காக சுயேச்சைக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மன்னிப்பு கோரியுள்ளார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் இன்று (25) கலந்து கொண்டு பேசும் போதே அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி சேனாதீரவிடம் மன்னிப்பு கோரினார்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்றத்தில் மரியாதையை பேணுவதன் முக்கியத்துவத்தையும் விளக்கமளித்தார்.

மேலும் தனது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டிய புரிதலுக்கு நன்றி தெரிவித்தார். ஆக்கபூர்வமான உரையாடலை வளர்ப்பதற்கும் நேர்மறையான மாற்றத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை அர்ச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துநடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால், என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது, ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை பேட்டி கண்டன, அவர்கள் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவனா என கேள்வி எழுப்பினார்கள் நான் இல்லை என பதிலளித்தேன் என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...