நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர் 2, 3 ஆம் திகதிகளில் நடைபெற மாட்டாது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களுக்கு உயர் தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.