எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சேகு இஸாதீன் அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்.
அவருக்காக பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்திற்கும், கட்சியினருக்கும் மஜக சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.