துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற 4வது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்காட்சியி- 2024ல், துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்தூகானுக்கு செரண்டிப் அறக்கட்டளையின் சார்பாக, உலகளாவிய நிவாரண உதவிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ஆற்றிய பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாக நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
இக் கண்காட்சியில் இலங்கை உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) பங்கேற்றன.
இக் கண்காட்சி விசேடமாக பலஸ்தீனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் சர்வதேச மனிதாபிமான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன் மனிதாபிமான உதவி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் தற்போதைய திட்டங்கள் பற்றிய விவரங்களும் கலந்து கொண்டோருக்கு காண்பிக்கப்பட்டன.
காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹைதர்பாசா” துறைமுகத்தில் கிட்டதட்ட 130 நாட்களாக நங்கூரமிட்டுள்ள “மாவி மர்மரா” கப்பலின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் விக்டன் கப்பலின் பணி குறித்தும் அர்த்தமுள்ள உரையாடல்களும் இக் காண்காட்சியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
தகவல்:
முஹம்மத் ஸுப்யான்
(Fb)