முஸ்லிம் சமூகம் மனிதர்களுக்கும் நாட்டுக்கும் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்!

Date:

முஸ்லிம் சமூகம் மனிதர்களுக்கும் நாட்டுக்கும் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி தெரிவித்தார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அநுராதபுர உபபிராந்திய பிரமுகர் அமர்வு 01ஆம் திகதியன்று ‘வளமிகு நாடு; முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகம்’ என்ற கருப்பொருளில் அநுராதபுர உப பிராந்திய பொறுப்பாளர் அஷ்ஷேக் ஏ.சீ.எம். யாசிர் இஸ்லாஹி தலைமையில் அநுராதபுர நகர சி.டி.சி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,

‘தனக்காக மட்டும் வாழும் ஒரு சமூகம் ஹைர உம்மத்தாக இருக்க முடியாது. ஹைர உம்மத் என்பது மக்களுக்கு நலவுகளை கொடுக்க வந்த சமூகமாகும். முஸ்லிம் சிறுபான்மை சமூகம் எப்போதும் தனது வீதத்தை விட அதிகமாக நாட்டுக்கும் பிரதேசத்துக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை சமூகம் நாம் நாட்டில் பத்து வீதமாக இருக்கலாம். ஆனால் எமது பங்களிப்பு அதைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில் நாங்கள் சொந்தக்காலில் நிற்பதோடு மட்டுமல்லாது, மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது மேம்பாட்டுக்கு பங்களிக்க கூடிய வகையில் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்ற விடயத்தையும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் வலியுறுத்தினார்.

இதேவேளை அநுராதபுர மாவட்டத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான புள்ளி விபரங்களோடு மாவட்ட கல்வி நிலை தொடர்பான முன்வைப்பொன்றை ஓய்வு நிலை கல்வி நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் ஏ.ஏ. சமத் (நளீமி) முன்வைத்தார்.

இக் கலந்துரையாடலை ஜமாஅத்தின் உதவிப் பொதுச் செயலாளர் வை.ஐ.எம். ஹனீஸ் நெறிப்படுத்தினார்.

மேலும் மாவட்ட கல்வி நிலை தொடர்பாக திட்டமிட்டு செயற்பட இன்னொரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ரம்யா லங்கா நிறுவனமும் அதன் செயற்பாடுகளும் பற்றிய விளக்கமொன்றை அதன் பணிப்பாளர்களில் ஒருவரான எம்.டீ.எம். அலி சப்ரி விளக்கினார்.

இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், மாவட்ட பள்ளிவாயில்கள் சம்மேளன உறுப்பினர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் நலன் விரும்பிகள் என மாவட்டத்தின் நாலாபுறங்களிலிருந்தும் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...