பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு அவசியமான விடயம்: சட்டத்தரணிகள் அமைப்பு

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

மேலும் சட்டபூர்வமான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்களிற்கு எதிராக இதனை பயன்படுத்தியுள்ளனர் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரஜைகளிற்கு சாதாரணமாக வழங்கப்படவேண்டிய மனித உரிமை பாதுகாப்புகளை முழுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கொடுரமான விதிமுறைகளிற்காக பெயர்போயுள்ளது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டிணைவு, பயங்கரவாதம் பற்றிய தெளிவற்ற மற்றும் பரந்துபட்ட வரையறையின் அடிப்படையில் கைது செய்வதற்கான காவலில் வைப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அதிகாரங்கள் நீதி ஆய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை,மேலும் இது பரந்துபட்ட அசாதாரண ஜனாதிபதி அதிகாரங்களையும் வழங்குகின்றது என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது மனித உரிமைகளிற்கு மாத்திரமின்றி  நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கும் அவசியமானது என தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த...

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை...