சிரியாவின் நான்காவது பெரிய நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்: எகிப்து, ஈராக் நாடுகளிடம் ஆயுத உதவியை கோரிய சிரியா ஜனாதிபதி!

Date:

சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள எச்.டிஎ.ஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் திடீரென அந்நாட்டின் ராணுவம் மீது தாக்குதலை ஆரம்பித்து.

கடந்த சில நாட்களில் அங்குத் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது தாரா என்ற நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது. கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்கள் வசம் செல்லும் நான்காவது நகரம் இதுவாகும்.

மத்திய கிழக்கில் நாடுகளில் ஒன்றான சிரியாவில் எப்போதும் உள்நாட்டுப் போர் இருந்து கொண்டே இருக்கும். அங்கு பஷர் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஜனாதிபதி இருக்கிறார்.

அவரை ஆட்சியில் இருந்து அகற்றப் பல முறை வன்முறை வெடித்த போதிலும், ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் கிளர்ச்சியாளர்களை வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குவார். கடந்த 2020ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அங்கு சற்று அமைதி திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கடந்த நவ. 27 சிரியாவில் தாக்குதலைத் தொடங்கிய ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள்.

இன்று கிளர்ச்சியாளர்கள்  நடத்திய தாக்குதலில் சிரியாவின் தெற்கு நகரமான தாராவைக் கைப்பற்றி உள்ளனர். இந்த குழு சிரியாவில் கடந்த சில நாட்களில் கைப்பற்றிய நான்காவது நகரம் இதுவாகும்.

சிரியாவில் இப்போது திடீரென வெடித்துள்ள இந்த மோதல் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனாதிபதி  அசாத்திற்கு எதிராக முதலில் இந்த தாரா நகரில் தான் கலகம் வெடித்தது.

அப்போது ரஷ்ய உதவியுடன் அந்த அசாத் முறியடித்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் அதே தாரா நகரம் ஹெடிஎஸ் பிரிவினர் கைகளுக்குச் சென்றுள்ளது.

ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள இந்த தாரா நகரம் அந்த பிராந்தியத்தின் தலைநகராகவும் செயல்படுகிறது.

மேலும் இதில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியாளர்களிடம் சிரிய ராணுவம் தொடர்ந்து சரணடைந்து வரும் நிலையில், அதைத் தடுக்க சிரிய ஜனாதிபதி  அசாத் ஐக்கிய அமீரகம், எகிப்து, ஜோர்டான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை உதவியை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலைமை மோசமாக இருப்பதால் அசாத்தை நாட்டை விட்டு வெளியேறவும் சில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி அசாத்திற்கு எதிராகப் பல முறை வன்முறை வெடித்த போது அவருக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் இறங்கும்.

இதன் காரணமாகவே அவர் தனது ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. ஆனால், இப்போது உக்ரைனில் போரில் ரஷ்யாவும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால் ஈரான், ஹிஸ்புல்லா பலவீனமாக இருக்கிறது.

இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அசாத் ஆட்சியை அகற்றிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு எச்.டிஎ.ஸ் படையினர் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...