மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் ஜனவரி 17இல்

Date:

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவுக்கான பொது கலந்துரையாடல்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 08 ஆம் திகதி வரை எழுத்துப்பூர்வ கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் 09 அமர்வுகள் மூலம் வாய்வழி கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, எழுத்துப்பூர்வ கருத்துக்களை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 427 1030 என்ற WhatsApp இலக்கத்திற்கு அல்லது தபால் மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம்.

 

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...