ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.