அசாத் சாலியின் கைது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  கைது செய்யப்பட்டு தடுத்து வைத்தமை சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்ட ஈடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆத் திகதி கைது செய்யப்பட்ட அசாத் சாலி 9 மாதங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் 2021 டிசம்பர் 2ஆம் திகதி  கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...