இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய குறிப்பேட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (16) ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன் ரயில் மூலம் கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக ஏறாவூருக்கு வருகை தந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்த குறிப்பேட்டில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை பொலிஸார் அவதானித்தனர். இதனையடுத்து, குறித்த இளைஞன், விசாரணையின் பின்னர் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.
இவர் தனது குறிப்பேட்டில் ’60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என எழுதியிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.