அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யஹ் அரபுக் கல்லூரியில் சர்வதேச அரபுத் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஆதம் யாஸீம் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இன்று (18) விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அலாவுதீன் (நூரி) அவர்கள் அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாரம்பரியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, உஸ்தாத்மார்களின் வழிகாட்டலில் அரபு எழுத்துத்தணி, அரபுப் பேச்சு, அரபுக் கவிதை, அரபுக் கஸீதா போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவப்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிகழ்வு அரபு மொழியின் மகத்துவத்தையும் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் மாணவர்களுக்கு பரப்பும் தளமாக அமைந்திருந்தது.