நாட்டுக்கு மாடு, உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி..!

Date:

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உயர் பாரம்பரிய பால் மாடுகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள பால் மாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளால் தேவையான பால் மாடுகளை விநியோகிப்பதற்கு இதுவரைக்கும் இயலாமல் போயுள்ளது.

அதனால் நேரடியாக இரண்டு அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களாகப் பொருத்தமான கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை தொடர்பாக நாடுகள் சிலவற்றிலிருந்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இடையீட்டின் கீழ் பாகிஸ்தான் வணிக அபிவிருத்தி அதிகாரசபையால் சஹிவால் (Shahiwal) மற்றும் நிலிரவி வகைகளைச் சார்ந்த ஏழு (07) சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை எமது நாட்டுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை இறக்குமதி செய்து சுக்கிலங்களை விருத்தி செய்யும் வரைக்கும் சஹிவால் வகையைச் சார்ந்த 20,000 சுக்கில சினைகளை இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்திச் சபை மூலம், அரசுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களாகக் கொள்வனவு செய்வது பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து (05) பால் மாடுகள் மற்றும் நிலிரவி இனத்தைச் சேர்ந்த இரண்டு (02) இனையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கிடையிலான கொள்வனவாகப் பெற்றுக் கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜனவரி மாதத்தில் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்குத் தீர்வாக பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01-31 திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...