வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி..!

Date:

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  அறிவித்துள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு மருத்துவர்களின் அசல் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, ஆனால் முந்தைய அரசு 2022 இல் அதை 60 ஆகக் குறைத்துள்ளது என்று அவர் விளக்கினார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...