பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் (20) போராட்டமொன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.
இதன்போது போராட்டக்காரர்கள் ‘இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று, பலஸ்தீனுக்கு எதிரான இனப் படுகொலைகளை உடனே நிறுத்து’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பின் ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தியின் மிஃலால் மௌலவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.