இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் சென்றுள்ள முதல் பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு சென்று உள்ளார்.
விமான நிலையத்தில் சென்றடைந்த பிரதமர் மோடி அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது இந்தியா – குவைத் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் குவைத் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் Sheikh Sabah Al-Khalid, மற்ற தலைவர்கள், தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், குவைத்தில் வசிக்கும் இந்திய மக்கள் மற்றும் தொழிலாளர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து நடப்பாண்டுக்கான அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் செல்லும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த 1981ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே குவைத் தலைநகர் குவைத் சிட்டிக்கு வந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப்பயணத்தின் போது இந்தியாவின் பழம்பெரும் வரலாற்று இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரத நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்த அப்துல்லா அல் பரூன் மற்றும் அப்துல் லத்தீஃப் அல் நெசெப் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இதன்போது அப்துல்லதீப் அல்னெசெப் கூறுகையில், இது எனக்கு கிடைத்த கௌரவமாக உள்ளது. இதனால் மோடி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை, மொழிபெயர்க்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.
இரண்டு புத்தகங்களிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
#WATCH | Kuwait | Ramayana and Mahabharata published in Arabic language by a book publisher The book publisher says, “It took two years to translate Ramayana and Mahabharata into the Arabic language… ” pic.twitter.com/CL4kejRKlh
— sanjay chaturvedi (@sanjay16sanjay) December 21, 2024