– பிரதமர் ஹரினி அமரசூரியவின் புத்தாண்டு வாழ்த்து
இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.
பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில், பொருளாதாரம், தொழிற்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு பிரஜையும் இனம், பாலினம் அல்லது மதம் என்ற பேதங்களைக் கடந்து அமைதியான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் சவால்மிக்கதாக இருந்த போதிலும், குறித்த இலக்கை அடைவதற்கென பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம்.
மலர்ந்துள்ள இந்த 2025ம் ஆண்டு அனைத்து பிரஜைகளுக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டுமென நான் வாழ்த்துக்கின்றேன்.