இன்று முதல் நாடளாவிய ரீதியில் இந்திய திரைப்பட விழா

Date:

இந்தியத் திரைப்பட விழாவானது, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள நகரங்களில் நடத்தப்படும், என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள PVR Cinema இல் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06.30 மணியளவில், பொலிவூட் ஹிட் திரைப்படமான ‘83’ திரையிடலுடன் இத்திரைப்பட விழாவானது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்துடன் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்விழாவில் நாடகம், காதல், சண்டைக்காட்சி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் அடங்கிய செழுமையான திரைப்படங்களின் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பிற்கு மேலதிகமாக பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.

இத்திரைப்பட விழாவிற்கான அனுமதி இலவசம், அனுமதி சிட்டைகளை பெற்றுக்கொள்ள dir.icc.colombo@gmail.com மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும்.

 

 

 

Popular

More like this
Related

2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...

பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்

2025 க.பொ.த உயர்தர நடைமுறைப் பரீட்சைக்கான, பரீட்சை கண்காணிப்பாளர்களை தெரிவு செய்வதற்கான...

ஜனாதிபதி அநுர ஜப்பான் விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக...

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...