நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு அர்கம் இல்யாஸ்!

Date:

நாடாளுமன்ற நிதிக்குழுவில் (CoPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் பொறியியலாளர் அர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவால்  இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவின் தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக...

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி,...