சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கப்டில்

Date:

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது கிரிக்கெட் பயணம் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியதாகவும், நியூசிலாந்து அணிக்காக ஆடிய ஒவ்வொரு போட்டியும் தனக்குப் பெருமை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

கப்டில் தனது திரை இறுதி எனக் கூறிய இந்த முடிவை எடுத்ததற்கு தனது குடும்பத்தினரின் ஆதரவும் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் . அவர் தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள T20 லீக் போட்டிகளில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்டில் தனது விளையாட்டு வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7,000க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். குறிப்பாக, 2015 உலகக்கோப்பை போட்டியில் அவர் அடித்த 237 ரன்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.

கிரிக்கெட் உலகம் அவரது ஓய்வு அறிவிப்பை வரவேற்கையில், அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...