பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்: இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (06) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்தும் நோக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் உட்பட பரஸ்பர முக்கியத்துவம் மிக்க பல  விடயங்கள் குறித்து  கலந்துரையாடினர்.

அத்துடன் பாகிஸ்தானின் தொழில்நுட்ப உதவி, நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் மூலம் இலங்கையின் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு  போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் திறன்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்தல், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூக பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராடுவதற்கு ஒத்துழைப்புடன் பணியாற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளுக்காக பிரதியமைச்சர் பாகிஸ்தான் தூதுவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பு இரு நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...