முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொது ஆர்ப்பாட்டமொன்று இன்று (10) வெள்ளிக்கிழமை, 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் குழந்தைகள் உட்பட மியன்மார் ரோஹிங்யா அகதிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும், அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தைத் தொடர்ந்து,கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழ் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.