‘புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியிடப்படும்’

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு  பணிகள் நேற்று முன்தினம் (08) ஆரம்பமானதாகவும், இந்த மதிப்பீட்டு பணிகள் 12ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்போது, முதலாவது வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியானம் சம்பவம் உயர் நீதமன்றம் வரை முன்னெடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளுக்கமைவான வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.

அதன்படி,  புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குதல், 3 கேள்விகளையும் குறைத்தல் மற்றும் முழு பரீட்சையை மீண்டும் நடத்துதல் ஆகிய மூன்று பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரையைத் தேர்ந்தெடுக்குமாறு உயர் நீதிமன்றம் பரீட்சைகள் ஆணையர் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

அதற்கமைய, பரீட்சையின் முதல் வினாத்தாளில் வெளியானதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் மதிப்பெண்களை இலவசமாக வழங்க பரீட்சைகள் திணைக்களம் கடந்த முதலாம் திகதி தீர்மானித்தது.

 

Popular

More like this
Related

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...