இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு சர்வதேச மக்கா குர்ஆனிய மன்றத் தலைவரால் வரவேற்பு

Date:

தற்போது இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில், செனவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பின் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ,முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருக்கான விருந்துபசாரமும் வரவேற்பும் மக்காவிலுள்ள சர்வதேச குர்ஆனிய நிறுவனத்தின் தலைவர் இலங்கையாரான அஷ்ஷெய்க். முஹம்மத் ரியாழ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வைபவத்தில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.அமீர் அஜ்வத் அவர்களும் கலந்துகொண்டார்.

மேற்படி தூதுக்குழுவினர் சவூதி அரேபியாவுக்ககான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே இந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதி அமைச்சர் முனீர் முழப்பரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ். எம்.நவாஸும் மக்காவில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....