இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 280 மில்லியன் ரூபா தொகையுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

Date:

குருநாகல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா தொகையை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் மிகப்பெரிய தொகையை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...