இஸ்ரேல் ஹமாஸ் யுத்த நிறுத்த  ஒப்பந்தம் நாளை காசா நேரப்படி காலை 8.30 மணிக்கு ஆரம்பம்!

Date:

சுமார் 50,000 மக்களை படுகொலை செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை காயப்படுத்தி வீடுகளையும் பாடசாலைகளையும் சகல கட்டமைப்புக்களையும் முற்றுமுழுதாக துவம்சம் செய்து கடந்த 15 மாதகாலமாக இஸ்ரேல் மேற்கொண்ட அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகளின் பகீரத முயற்சியால் உடன்பாடு காணப்பட்டு இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்தத்தின் முதலாவது கட்டம் நாளை காசா நேரப்படி அதாவது இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.

முழு உலகமும் எதிர்ப்பார்த்திருக்கின்ற யுத்த நிறுத்தம் நிரந்தர யுத்த நிறுத்தமாக மாறி முழு பலஸ்தீன மக்களும் நிரந்தர சமாதான காற்றை அனுபவிக்கின்ற காலம் உதயமாக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக..

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்தது. பிரதமர் அலுவலகம் ஜனவரி 17-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்த நிலையில், இஸ்ரேலிய அமைச்சரவையும் தன்னுடைய ஒப்புதலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில்...

ஐ.நா சபையின் 80வது பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை!

ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும்...

போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள் அறிமுகம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான மழை!

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...