தேசிய ஷூரா சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவானார்.
தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை உரையையும் வரவேற்புரையையும் நிகழ்த்தினார். செயலாளர் ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களால் கடந்த கூட்ட அறிக்கையும் கடந்த இரு வருடங்களுக்கான தேசிய ஷூரா சபையின் நடவடிக்கைகளது அறிக்கையும் முன்வைக்கப்பட்டது.
நளீம் மஹ்ரூப் அவர்கள் நிதியறிக்கையை சமர்ப்பித்தார். சபரகமுக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அஸ்லம் விஷேட உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்கள், தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புக்களது பிரதிநிதிகள், செயலக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சபையோருக்கு கருத்துரை வழங்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது, ஷூரா சபையின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய தமது விமர்சன ரீதியான கருத்துக்களை சபையோரில் சிலர் முன்வைத்தது போலவே ஷூரா சபை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியும் தெளிவுப்படுத்தினர்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு பொதுக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.
பொதுக்கூட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் கூடிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பின்வரும் ஒழுங்கில் பதவி தாங்குனர்களை நியமித்துக் கொண்டனர்.
1. Br. M.M Zuhair PC (President)
2 .Ash-Sheikh S.H.M Faleel (Immediate Past President)
3 .Br. T.K Azoor (Deputy President/ MO Rep –COSLAM)
4 .Dr. Mareena Reffai (Deputy President
/ MO Rep – Al Muslimath)
5 . Br. Nadvi Bahaudeen (Deputy President)
6. Br. Rasheed M Imthiyaz (General Secretary)
7 . Br. Anas Azeez (Treasurer)
8. Br. Farzan Razick (Assistant Gen/ Sec)
9. Br. Sharaf Ameer (Assistant Gen/ Sec)
10. Br. N.P Nuhuman (Assistant Treasurer)
11. Br. A Javid Yusuf
12. Br. M.H.M Hasan
13. Br. Mahil Dole
14. Sheikh A.B.M Ashraff
15. Br. Hakeem Abu Bakr
16. Prof. Shifa
17. Br. Naleem Mahroof
18. Shk. Makdhoom
19. Br. M. Ajwadeen
Representatives from the MOs
உறுப்பு அமைப்புக்களது பிரதிநிதிகள்
20. Br. Sham Nawaz (MO Rep – ACUMLYF)
21. Sheikh Raeesdeen (MO Rep – JASM)
22. Br. A.J.M. Warith (MO Rep – AMYS)
23. Shiekh Abdullah Mohideen(MO Rep – CIS)
24. Shiekh A.M.M Azad (MO Rep – SALAAMA)
25. Br. Maqbool Aazil (MO Rep – SLJI)
26. Br. Mahsoom Ahamed (MO Rep – AUMSA)
27. Sheikh Fakeehudeen (MO Rep – AHADHIYA)
28. Dr. Rashad (MO Rep –WCCTD)
29. Br. Rafi (MO Rep – SLMMF)
30. Shiekh Yoonus Thabrees (MO Rep – ACTJ)
31. Moulavi. Nagoor Raheem (MO Rep KHATHEEB & MUAZZIN ASSO.)
32. To be Nominated (MO Rep – MICH)