காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று நள்ளிரவு 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அப்போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கண்டி மைலபிட்டிய பகுதியில் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் உடுதெனிய ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியானார்.