பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என்பது குறித்த தனது முடிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு விரைவாக அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (27) அறிவித்துள்ளது.
குறித்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அதன் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களின் விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுக்களின் விசாரணையின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.