அர்ச்சுனா எம்.பிக்கு பிணை: அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு

Date:

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தால் 2 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 20ஆம் திகதி இரவு அநுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  தெரிவித்துள்ளார்.

“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை.

தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்”  என தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...

2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன்...