தலைசிறந்த மார்க்க அறிஞரான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

Date:

கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், கேரள நத்வதுல் முஜாஹிதீன் (KNM) பொதுச்செயலாளருமான எம்.முஹம்மது மதனீ காலமானார்.

கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது மதனீ அவர்கள் சிறந்த எழுத்தாளரும் மார்க்க பிரச்சாரகரும், இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்.

கேரள மாநில ஹிலால் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்துள்ள முஹம்மது மதனீ அவர்கள் நீண்டகாலம் கோழிக்கோடு கலீபா மஸ்ஜித் இமாமாகவும் பணியாற்றியவர்.

புளிக்கல் மதீனத்துல் உலூம் மதரஸா, எடவண்ண ஜாமிஆ நத்வியா அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது இவர் உருவாக்கிய மாணவர்கள் தற்போது உலகின் பல பகுதிகளிலும் மார்க்க பணியாற்றி வருகின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் இம்மையின் நல்லறங்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனத்தை நிரந்தரமாக்குவானாக..

 

Popular

More like this
Related

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...