கஹட்டோவிட ஓகொடபொல ஸகாத் நிதியமும் கஹட்டோவிட, ஓகொடபொல உடுகொட உலமா சபை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்’ எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவொன்று சுதந்திரத் தினத்தன்று பெப்ரவரி 04ஆம் திகதி கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 4.00 மணி முதல் நடைபெறவுள்ள இந்த விசேட நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய அறிஞரும் ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவருமான அஷ்ஷெய்க் யூஸுப் ஹனீபா முப்தி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.