இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

Date:

இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,  இன்று  விடுவிக்கப்பட உள்ள 3 பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது.

இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...