மத்திய வங்கியின் பெயரில் சமூக வலைத் தளங்களில் போலி விளம்பரங்கள்: அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி  சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம் ” மத்திய வங்கியில் காணப்படும்  தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை எனவும்,  தமது  இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை  வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ  அல்லது தனிநபர்களுக்கோ  அதிகாரமளிக்கப்படவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும் https://www.cbsl.gov.lk/en/careers என்ற உத்தியோகபூர்வ இலங்கை மத்திய வங்கியின் தொழில்வாய்ப்பு பக்கத்தினூடாக பரீட்சித்து விண்ணப்பிக்குமாறும்  அவதானத்துடன் செயற்படுமாறும்  இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...